Connect with us

இலங்கை

அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம் – பிள்ளையான்

Published

on

அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபைமுறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையைஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் மக்கள் கையில் உள்ளது எனமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமானசி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள சுங்கான்கேணி கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில்கேட்டறியும் மக்கள் சந்திப்பு சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –  

எனது மக்கள் பணி தொடரும் யாரும்சந்தேகம் கொள்ள தேவையில்லை. வீதிகள், பாடசாலைகள், கிராமங்கள் அபிவிருத்திசெய்யப்படும். இந்த வருடம் அபிவிருத்திகள் ஓரளவு இடம்பெற்றாலும், 2022ம், 2023ம்ஆண்டளவில் அதிகளவான வேலைத் திட்டங்கள் இடம்பெறும்.  கொரோனா தாக்கம் காரணமாக உலக பொருளாதாரத்தில்சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளுர்உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.  கொரோனாதாக்கம் என்று பார்த்தால் தற்போது டெங்கு தாக்கல் அதிகரித்துள்ளது.   வாழைச்சேனை பிரதேசத்தில் டெங்குஅதிகரித்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதும், மக்கள் குப்பைகளை சரியான முறையில் அகற்றாமை,உள்ளுராட்சி மன்றங்களும் சரியான முறையில் இயங்காமையே காரணம் என்றும்அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

கல்வியை அதிகரிக்கும் வகையில் இவ்வருட நிதி மூலம்மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.அதில் சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் உள்வாங்கப்படும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிபிள்ளையானின் சொத்து அல்ல. அது உங்கள் கட்சி. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியைநிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நாங்கள்ஜனநாயகத்தினை நம்புபவர்கள்.  அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபைமுறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். 

மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையைஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது.அரச கொள்கையினுடாக வரும் அனைத்து விடயங்களும் செய்து தருவேன். பாரம்பரிய உற்பத்தியை நம்பி வாழும்மக்கள் நாம். 

இதனை மேம்படுத்த வேண்டும். அதிலும் இதனை குறைந்த விலைக்கு விற்கும்நிலைமைக்கு மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இதனை மாற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளைமேற்கொள்வேன் என்றார். சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய தலைவர்எஸ்.பாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி எஸ்.ஹரிகரன், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது சுங்கான்கேணி பிள்ளையார்ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுதலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

இதில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலயநிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், சுங்கான்கேணிஅரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்று பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகள் மற்றும் பாடசாலை வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், பாதிப்படைந்து காணப்படும் வீதிகளையும் பார்வையிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *