Connect with us

இலங்கை

அனுமதிப்பத்திரம் இன்றி வெடிப்பொருட்களை கொண்டுச் சென்ற 4 சந்தேகநபர்கள் கைது

Published

on

அனுமதிப்பத்திரம் இன்றி வெடிப்பொருட்களை கொண்டுச் சென்ற 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவுல, எலஹெர வீதியின் பகமுண பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் வைத்து குறித்த வெடிப்பொருட்கள் மீட்கக்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 வோடர் ஜெல் குச்சிகள், 20 கிராம் வெடி மருந்து, 14 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.