Connect with us

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன

Published

on


மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று (11.01.2021) மீன்டும் திறக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய தரம் 2 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாட்டுக்கமைய மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று(11) திங்கட் கிழமை மீன்டும் திறக்கப்பட்டன.
கல்வியமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழல், வகுப்பறை என்பன சுத்தப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டன.

கல்முனை மஹ்மூர் மகளிர் கல்லுரிக்கு வருகைதந்த மாணவர்களுக்கு பாடசாலையின் நுளைவாயலில் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டன. சுகாதார சட்ட விதிமுறைகளை கடைப்பிடிந்து மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை இன்றைய தினம் அதிகளவிலான மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தததுடன் கற்பித்தல் செயற்பாடுகளும் நடைபெற்றன. விழிப்புணர்வு அறிவுறுத்தலகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.