Connect with us

இலங்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு 150 மணித்தியாலயம் கொண்ட சிங்கள மொழி பயிற்சி

Published

on

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் இரண்டாம் மொழியினை பூர்த்தி செய்யாத அரச உத்தியோகத்தர்களுக்கு 150 மணித்தியாலங்களை கொண்ட வதிவிடமற்ற சிங்கள பயிற்சிநெறி தற்போது நடைபெற்று வருகின்றன. கல்முனை பிரதேச செயலகத்தில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களது திறனை வெளிப்படுத்தும் இறுதிநாள் நிகழ்வு நேற்று (12.04.2021) எம்.என்.எம்.சசீர் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்
நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி நெறியை ஒழுங்குபடுத்தி நடாத்திய அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவித்தார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலி, கிராம நிர்வாக உத்தியோகத்தர், யூ.எல்.பதியூத்தீன், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி எஸ்.ஜனுபா, தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மொழிவளவாளர்களான ஆர்.சிறீஸ் காந்தராஜா, பி.சந்திரகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *