சர்வதேசம்
அவசர கதியில் மருத்துவமனை கட்டும் சீனா

சீனா அவசர அவசரமாக 6 புதிய மருத்துவமனைகளை கட்டி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை மிரட்டி வரும் கொரோனா சீனாவின் வூகான் நகரில் உருவெடுத்தது. கடந்த 5 மாதமாக அங்கு நிலைமை சகஜ நிலைக்கு திரும்பி விட்ட நிலையில், தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா அவசர அவசரமாக 6 புதிய மருத்துவமனைகளை கட்டி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கடந்த சனியன்று 1500 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனையை சீனா கட்டி முடித்துள்ளது.
நாங்கோங்கில் கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் மொத்தம் 6500 அறைகள் கொண்ட 6 மருத்துவமனைகளில் இது ஒன்றாகும். இதேபோல் ஷஜியாங்ஜூவாங்கில் 3000 அறைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றது.
மீண்டும் நோய் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனா மருத்துவமனை கட்டும் பணியை வேகப்படுத்தி இருப்பது உலக நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது