இலங்கை
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும்

இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
குறித்த தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன். காரணம் என்னவென்றால் ஆசிரியர்கள் அவதான நிலையில் உள்ளனர். பலருடன் நாளாந்தம் பழகுகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும்.
எனது கருத்தை நான் முன்வைத்துள்ளேன். லலித் வீரதுங்கவிடம் இது தொடர்பில் பேசியுள்ளேன். ஆசிரியர்களுக்கும் இதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. பெப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்கு கூறியுள்ளார். என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.