சர்வதேசம்
இந்தியாவின் முதல் தொகுதி தடுப்பூசி இலங்கைக்கு?

இந்தியாவில் இன்று (20) முதல் COVID – 19 தடுப்பூசி ஏற்றுமதி ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது தடுப்பூசி தொகுதி பூட்டான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
COVID – 19 தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான அனுமதியை இலங்கையிடம் இருந்து எதிர்பார்த்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஏனைய ஆசிய நாடுகளுக்கு இன்று முதல் தடுப்பூசி விநியோகிக்கப்படவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் ஷீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்திய அரசினால் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.