Connect with us

இலங்கை

இலங்கையின் வரலாற்றில் மத்தியஸ்த சபையின் முதலாவது முஸ்லிம் பெண் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் மகுடம் சூட்டி பாராட்டி கொளரவிக்கப்பட்டார்

Published

on

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (11) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி தாபிக்கப்பட்ட நிந்தவூரின் 4 வது மத்திய சபைக்கு திருமதி பால்கிஸ் அப்துல் மஜீத் தவிசாளராக நியமனம் செய்யப்பட்டார்

சுமார் 40 வருடங்கள் பயிற்றப்பட்ட கணித பாட ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஹாஜியானி பல்கீஸ் அப்துல் மஜீத் இலங்கையின் வரலாற்றில் மத்தியஸ்த சபையின் முதலாவது முஸ்லிம் பெண் தவிசாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் மத்தியஸ்த சபையின் வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது முஸ்லிம் பெண் தவிசாளரான திருமதி பல்கீஸ் ஆசிரியரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் நிந்தவூர் மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தர்களது மகத்தான பணியை பாராட்டி நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாராட்டு விழாவின் போது நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் மூலம் “மத்தியஸ்தம்” எனும் சிறப்பு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *