Connect with us

இலங்கை

இலங்கை தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும்…

Published

on

ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரிதமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கில் இயங்கும் சிவில்அமைப்புகள், மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைமற்றும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட தமிழர் பாரம்பரிய ஒன்றியத்தின் பிரதிநிதிசட்டத்தரணி லியோ ஆம்ஸ்ரோங், கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் பிரதிநிதி எஸ்.சிவயோகநாதன், அம்பாறை சிவில் அமைப்புகளின் பிரதிநிதி இரா.விக்னேஸ்வரன், தமிழ் சிவில்அமைப்புகளின் ஒன்றியப் பொதுச் செயலாளர் அ.கஜேந்திரன், வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி திருமதி யோ.கனகரஞ்சனி, தமிழ்த் தேசியவாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன், சிவகுரு ஆதின முதல்வர் வேலன் சுவாமிகள்மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் ஆகியோர் இவ்வறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

அனுப்பப்பட்டுள்ளஅறிக்கையில்,இலங்கையின்நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத் தொடருக்குஆயத்தமாகிற இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட  பிரதிநிதிகள், தமிழ் தேசியக் கட்சிகளின்தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சிவில்அமைப்புக்கள் ஆகிய நாம் இக்கடிதத்தினை எழுதுகிறோம். இலங்கையின்இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒருவாரகாலத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.செயலாளர் நாயகத்தோடு 23 மே 2009ம்திகதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.“இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளுக்கும், சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும்அமைவாக, மனித உரிமைகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைஇலங்கை மீண்டும் வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள்மீறப்பட்டதை விசாரிப்பதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றின் முக்கியத்துவத்தைசெயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இந்த முறைபாடுகளை விசாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைஎடுக்கும்”மேற்சொன்னஉறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கை எதுவும் எடுத்திராதபின்புலத்தில், இலங்கையில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில்எழுந்த மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கென்று, 22 ஜூன் 2010 இல்மூவர் அடங்கிய குழு ஒன்றை செயலாளர் நாயகம் நியமித்தார். நிபுணர்கள் குழுவின் இந்தஅறிக்கை மார்ச் 2011 இல் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்புசெப்டெம்பர் 2011 இல் இவ்வறிக்கையை செயலாளர் நாயகம் ஐ.நா. மனித உரிமை பேரவைதலைவரிடத்திலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடத்திலும் பாரப்படுத்தினார்.

பின்புஐ.நா.மனித உரிமைப் பேரவை “இலங்கையில்நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்தல்” என்ற 19/02தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்பின்பு இவ்விடயத்தை தன்னகத்தே வைத்திருந்து மார்ச்2013 இலும் மார்ச் 2014 இலும் தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும் தீர்மானங்கள் 30/01(ஒக்டோபர் 2015), 34/01 (மார்ச் 2017) மற்றும் 4/01(மார்ச் 2019) ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. இலங்கையின்அரசியல் வெளியில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக, அரசியல் தலைவர்கள்,விதிவிலக்கு இல்லாமல் இலங்கையின் படைத்தரப்பினரை நீதிவிசாரினையிலிருந்து பாதுகாப்போம்என்று கூறிவந்துள்ளார்கள்.

ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாக இலங்கையில் பொறுப்புக்கூறலைஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.இராணுவமயமாக்கல்,அரசியல் கைதிகளை கால வரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சிஎன்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின்பாரம்பரியமானதும் கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்களை கண்காணிப்பதை தீவிரப்படுத்துதல், கோவிட்19 ஆல் இறக்கும்முஸ்லிம் சகோதரரின் ஜனாசா அடக்கத்தை மறுத்தல், நினைவேற்றல் உரிமையை மறுத்தல்போன்ற  தமிழ் மக்களுக்கு எதிராகதீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக்காட்டுகின்றன.ஐ.நா.மனிதஉரிமைப் பேரவை பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தீர்மானம் 40/01 இன்கீழ் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காககூடுகையில் இவ்வாறான முடிவெடுத்து இறுதித் தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும்.

இத்தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டத்தின் போதுஇழைக்கப்பட்ட இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தகுற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கைதவறிவிட்டதென்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறைமூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பிரகடனப்படுத்த வேண்டும்.நாம்பின்வருவானவற்றைக் கோருகிறோம்.

1)    இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்குஎதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச்சபை, ஐ.நா.பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள்வலியுறுத்த வேண்டும்.

2)    ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தலைவர்இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

3)    ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம்இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களை கண்காணிக்கவும் இலங்கையில்அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

4)    மேலே 1)இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐ.நா.பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைசேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல். பொறுப்புக்கூறல்சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்படல்வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.ஆகையால்இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்க்கமாகவும் காலம்கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்துகிறோம். என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *