இலங்கை
இலங்கை பெண்களுக்கு புதிய வாய்ப்புகள்.

தாதி மற்றும் வீடு பராமரிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும், அங்குள்ள குறித்த மனிதவள நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இலங்கை புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பராமரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெண்கள் ஏற்கனவே உள்நாட்டு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவதாகவும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைக்காமையால் அவர்களுக்கு கூடிய சம்பளத்தை பெற முடியாதுள்ளதாக குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையில் NVQ பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கும் அதன் பின்னர் அவர்களை வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கும் தீர்மானித்துள்ளது.