இலங்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் 10ஆம் திகதி விவாதத்திற்கு…

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஏப்ரல்-21 தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையே இவ்வாறு எதிர்வரும் 10ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு வரவுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து அமைச்சரவைத் துணைக்குழு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.