Connect with us

இந்தியா

எம்ஜிஆர் பிறந்த நாளன்று கட்சி துவக்குகிறார் ரஜினி

Published

on

எம்ஜிஆர் பிறந்த நாளன்று கட்சி துவக்குகிறார் ரஜினி

‘சிஸ்டம் சரியில்லை; மாற்றம் இப்போது இல்லைன்னா; எப்பவுமே இல்லை’ எனப்பேசி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய நடிகர் ரஜினி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி ௧௭ல் அரசியலுக்கு வருகிறார். அன்றைய தினம் அதிகாரபூர்வமாக கட்சியை துவக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்துஉள்ளார்.

கட்சி துவக்கும் நாள் குறித்த அறிவிப்பை டிச., 31ல் வெளியிட உள்ளார்.கட்சி துவக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பா.ஜ. நிர்வாகி அர்ஜுனமூர்த்தி ஆகியோரையும் நியமித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். – தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை துவக்கி ஆட்சியை பிடித்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் தற்போது நடிகர் ரஜினி புதிய கட்சி துவக்க ஆலோசனை வழங்கி வருகின்றனர்.கடந்த ஆண்டு ரஜினி கல்லுாரி விழா ஒன்றில் பேசுகையில் ‘சிஸ்டம் சரியில்லை; அதை மாத்தணும். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நல்லாட்சி தந்தார். நான் அரசியலுக்கு வந்தால் அவர் ஆட்சியை தருவேன்’ என்றார்.

தற்போது அவருக்கு ஆலோசனை வழங்கி வருவோரும் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தும்படி ஆலோசனை வழங்கி உள்ளனர்.அ.தி.மு.க. தற்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். பெயரை அதிகம் உச்சரிப்பதில்லை. தங்கள் அரசை’ ஜெயலலிதா அரசு’ என்றே கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜன. 17ல் அரசியல் கட்சியை துவக்கும்படி நடிகர் ரஜினிக்கு எம்.ஜி.ஆர். விசுவாசிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *