இலங்கை
ஐயப்பனின் நெய் அபிஷேகப் பூசை மற்றும் நெய் பவனி

வாழைச்சேனை கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஸ்ரீ ஐயப்பன் தரிசன யாத்திரை குழுவின் ஏற்பாட்டில் நெய் அபிஷேகப்பூசை மற்றும் நெய் பவனி இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை கொண்டையன் கேணிபிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று ஐயப்ப சுவாமிமார்களினால் நெய் ஏந்திஆலயத்தில் இருந்து ஆரம்பமான பவனி கொண்டையன்கேணி வீதி, கறுவாக்கேணி வீதி,பாடசாலை வீதி வழியாக கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது.
இதன்போது ஐயப்ப சுவாமிமார்களினால்பவனியாக கொண்டுவரப்பட்ட நெய் ஸ்ரீ ஐயப்பன் தரிசன யாத்திரை குழுவினால் ஆலயத்தில் வைத்துவழிபடும் ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகப் பூசை இடம்பெற்றது.
இப்பூசைகள் யாவும் ஸ்ரீ ஐயப்பன் தரிசனயாத்திரை குழுவின் குரு சுவாமிகளான சிவஸ்ரீ;.ப.கண்ணன் குருக்கன், சிவஸ்ரீ.க.மகேந்திரன் குருக்கள்தலைமையில் நடைபெற்றது. இப்பூசையில் ஐயப்ப சுவாமிமார்கள், பக்தர்கள் எனப் பலர்கலந்து கொண்டனர்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை ஐயப்ப பக்தர்கள் இந்தியாவின் கேரளாவிலுள்ளஐயப்பனின் சபரிமலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் தாங்கள் விரதம் இருந்து வழிபடும்இடத்தில் இம்முறை சபரிமலையிலுள்ள ஐயனை நினைத்து பூசைகளை செய்து வருகின்றது.
அத்தோடு கடந்த வருடம் கார்த்திகைமாதம் 16ம் திகதி ஐயப்ப மாலை அணிந்து ஆரம்பமான ஐயப்ப விரதம் தைப்பொங்கல் தினமானஇன்று வியாழக்கிழமை மகரஜோதி பூசையுடன் ஐயப்ப விரதம் நிறைவுபெறுகின்றமைகுறிப்பிடத்தக்கது.
