Connect with us

இலங்கை

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம்

Published

on

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகபிரிவில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார தரப்பினருடன்இணைந்து அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அதிகளவான முயற்சிகளை மேற்கொண்டாலும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காத விடத்து பிரதேசத்தில் இருந்து டெங்கு நுளம்பினைகுறைக்க முடியாத நிலை உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்தெரிவித்தார். 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இருபதாம் திகதி வரை எண்பத்திநான்கு (84)பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமானால்இன்னும் நிலைமை மோசமடையும் என்ற அச்சம் உள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பிரதேசம் டெங்கிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்செயற்பட வேண்டும் அப்போதுதான் இந்த கொடிய டெங்கிலிருந்து நாம் ஒவ்வொருவரும்பாதுகாப்பினை பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த பிரதேசத்தில் இருந்து டெங்கினைமுற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்கடமைபுரியும் மேற்பார்வை பொது சகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு கட்டுப்பாட்டு வெளிக்கள உத்தியோகத்தரகள், அலுவலக உத்தியோகத்தர்கள்அனைவருடனும் இணைந்து ஓட்டமாவடி பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச செயலகம்,பிரதேசத்தின் விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்இணைந்து செயற்பட்ட போதிலும் பொது மக்களிடம் இருந்து எங்களுக்கான போதியளவு ஒத்துழைப்பு கிடைக்காமையே இந்த டெங்கு நுளம்பு பெருக்கத்தை குறைக்க முடியாமல் உள்ளது. 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் வகையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில்தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. 

அந்தவகையில் சுகாதார வைத்தியஅதிகாரி அலுவலக பிரிவில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளல் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது. இதன்போது வீடு வீடாக சென்று டெங்குபரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளைவைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம்இல்லாமல் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும்எச்சரிக்கப்பட்டனர். 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் ஜனவரி மாதம் முதாம் திகதி முதலாம் இருபதாம் திகதி வரை எண்பத்திநான்கு (84) பேர் டெங்கு நோயினால்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்தேழு (27) நபர்களுக்கு வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், எண்பத்தியொரு (81) நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்தெரிவித்தார்.