கிழக்கு செய்திகள்
கல்முனை நகர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

கல்முனை நகரை 18.12.2020 இல் இருந்து மூன்று தினங்களுக்கு தொடர்ச் சியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக முடக்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை நகரை அண்டிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்சியாக அதிகரித்து வருவதை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் 17.12.2020 மாலை கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் நகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரைக்குமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக 16.12.2020 மாலை அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்தும் முடக்கப்பட்டது.
இதனையடுத்து கல்முனை நகரில் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரைக்குமான நகர் பிரதேசத்தை பொதுமக்கள் நடமாற்றம் அற்ற பகுதியாக பிரகடனப்படுத்தி தொற்று மேலும் பரவுவதை கட்டுப்படுத்த தீர்மாணிக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்துக்குள் அமைந்துள்ள கல்முனை பொதுச் சந்தை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மூடப் படுவதுடன் குறித்த பகுதிகளில் காணப்படும் பாடசாலை, பள்ளிவாசல்கள் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி சுமார் 1000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை அத்தியாவசிய சேவைகளை வழங்கும் திணைக்களங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வது என்றும் பிரதான வீதி ஊடான பொதுப் போக்குவரத்து வழமைபோன்று நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள குறித்த பகுதிகளில் பயணிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவுறுத்தல்களை மீறி பயணிப்போர் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கையை பொலிசாரல் முன்னெடுக்கப்படும். இப்பிரதேசத்தில் பொது வியாபாரங்களில் ஈடுபடுவது, பொதுமக்கள் ஒன்று கூடுவது போன்ற அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்