கிழக்கு செய்திகள்
கல்முனை பிராந்தியத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் மரணம் பதிவாகியது


கல்முனைப் பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றுவரை(13) 419 ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு நோயாளிகளுக்கும், இரு வைத்தியர்கள் மற்றும் இரு தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 06 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய தொற்றாளர் ஒருவரே மரணமானார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியளாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 577 ஜத் தாண்டியுள்ள அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 419 ஆக உயர்வடைந்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணைக்குமான எமது சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகள் அடம்பெற்று வருகின்றன.
பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 88 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 94 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72 பேரும் அட்டாளைச்சேனையில் 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது.
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72 பேரும் அட்டாளைச்சேனையில் 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது.
கல்முனைப்பிராந்தியத்தில் முதலாவது கொரோனா இறப்பும் பதிவாகியுள்ளது. தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும் என்பதுடன் சகல திணைக்களங்களும் எமக்கு வழங்கிவருகின்ற ஒத்துளைப்பையும் பாராட்டுகின்றேன். வுழிப்புணர்வுடன் தொடர்தும் செயற்பட்டால் தொற்று மேலும் தீவிரமடையாமல் பாதுகாக்க முடியும் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Continue Reading