Connect with us

இலங்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ‘கலைஞர் சுவதம்’ விருது வழங்கி கௌரவிப்பு

Published

on

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்திய ‘கலைஞர் சுவதம்’ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் இன்று (04.03.2021) பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் மிக நீண்டகாலமாக கலைத்துறைக்கு அர்பணிப்புடன் பங்களிப்பு செய்துவருகின்ற பத்து (10) பல்துறை கலைஞர்களுக்கு ‘கலைஞர் சுவதம்’ விருது மற்றும் சான்றிதழ், பரிசு என்பன வழங்கி கௌவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் போது 2020 ஆண்டு தேசிய கல்வி நிறுவனம் தேசிய ரீதியாக நடாத்திய சிறுவர் ஓவியப் போட்டியில் 3 ஆம் இடத்தினை பெற்ற அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களுடைய புதல்வி ஜெ.தக்ஷான்யா விசேட நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்ஸான், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாஜினி, உட்பட கலாசார உத்தியோகத்தர் கே.பிரபாகரன் உட்பட் பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *