Connect with us

இலங்கை

கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த இளைஞர் கைது!

Published

on

நேற்றைய தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட தீவிரவாத கருத்துக்களை முன்னெடுத்ததாக கூறப்படும் நபரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடந்த 12 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு வந்தவராவார்.

அத்துடன் நேற்று வாழைச்சேனை பகுதியில் விசேட பொலிஸ் பணிக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ரூ. 5,000 கள்ள நோட்டுக்கள் 20 தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.