அறுசுவை
காபி குழிப்பணியாரம்

என்னென்ன தேவை?
காபித் தூள் – 4 டீஸ்பூன்
பொடித்த முந்திரி, பாதாம்,
பிஸ்தா, பொரி – தலா 2 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – கால் கப்
வாழைப்பழம் – அரை கப்
சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்
ஆப்பிள் – கால் கப்
கொப்பரைத் தேங்காய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை, காபித் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா, பொரி, ஏலக்காய்ப் பொடி, வாழைப்பழம், ஆப்பிள், சுக்குப்பொடி, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். முந்திரியை நெய்யில் வறுத்து மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள்.
குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து அதில் கால் பங்கு அளவுக்கு எண்ணெய் ஊற்றுங்கள். கலந்து வைத்த மாவைக் குழியில் முக்கால் அளவுக்கு ஊற்றி, திருப்பிப்போட்டு நன்றாக வெந்ததும் பரிமாறுங்கள்.