சர்வதேசம்
கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைப்பு

சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு
ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில்
இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில்
பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி
நடந்தது. இதேபோல், இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும்
நிகழ்ச்சி ஜனவரி 31-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கொரோனா பாதிப்புகள்
அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை தள்ளிவைக்க முடிவு
செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன. இதன்படி, ஜனவரி இறுதியில் நடைபெறுவதற்கு
பதிலாக மார்ச் 14-ம் தேதி கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த
முடிவு செய்யப்பட்டு உள்ளது.