இலங்கை செய்திகள்
கிளங்கன் வைத்தியசாலையின் மகளிர் சிகிச்சை பிரிவு தற்காலிமாக மூடப்பட்டது.

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையின் மகளிர் சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிளங்கன் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் சிகிச்சைப் பிரிவை மற்றுமொரு விடுதியில் துரிதமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் சிகிச்சைப் பிரிவிலிருந்த வைத்தியர், தாதியர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் 15 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கிளங்கன் வைத்தியசாலையில் COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்ட யுவதி, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.