ஆன்மீகம்
கீரிமலை அந்தியேட்டி மடம் மீண்டும் திறப்பு

கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த கீரிமலை அந்தியேட்டி மடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கீரிமலை அந்தியேட்டி மடத்தில் அந்தியேட்டிகிரியைகளை மேற்கொண்ட ஒருவர் மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்பு பட்ட நிலையில் அவருக்கு கொரோனாதோற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத் து அந்தியேட்டிகிரியைகளை மேற்கொண்ட குருக்கள் மற்றும் பதிவுகளை மேற்கொண்ட பிரதேச சபை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன் மடமும் மூடப்பட்டது. கடந்த டிசம்பர் 31ம் திகதி வலிவடக்கு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபையினர் மேற்கொண்ட தொற்று நீக்கப்பணிகளையடுத்து இம்மாதம் முதலாம் திகதி முதல் கீரிமலையில் அந்தியேட்டிகிரியைகளைச்செய்வதற் கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading