இலங்கை
கூட்டு உடன்படிக்கை நிறைவுக்கு வந்த பின்னரே, தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழில் சங்கங்களுக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கை நிறைவுக்கு வந்த பின்னரே, தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதிகரிக்கப்பட்ட நாளாந்த 1000 ரூபா சம்பள அதிகரிப்பு எப்போது நடைமுறைக்கு வரும்? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த கூட்டு உடன்படிக்கை இம்மாதம் நடுப்பகுதியில் நிறைவடைகின்றது. இதனை தொடர்ந்து தொழில் அமைச்சரினால் சம்பளம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில மேலும் கூறினார்.