இலங்கை
கொரோனா அபாயத்தில் வவுனியா சிவப்பு வலயமாக மாறும் அபாயம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் வீரியம் மேல் மாகாணத்தில் சற்றுத் தளர்ந்துள்ள நிலையில் அது வடக்கை நோக்கி மையம் கொள்ளத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் வடமாகாணத்தின் வவுனியா பிரதேசம் அண்மைக் காலமாக கொரோனா கொத்தணியாக மாறத்தொடங்கியுள்ளது.
எதிர்வரும் வாரங்கள் மிகக் கடுமையாக இருக்குமென்றும், வவுனியாவில் கொரோனா கொத்தணி மேலும் விரிவடையலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் வவுனியா பிரதேசமே சிவப்பு வலயமாக அறிவிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நகரின் அனைத்து கடைகளையும் மூடி பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கலாமா என்று உயரதிகாரிகள் மட்டத்தில் அவசர ஆலோசனைகள் இடம்பெறுவதாகவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.