இலங்கை
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முன்பள்ளிகள் அரசின் அறிவுறுத்தலுக்கமைய ஆரம்பிக்கப்பட்டது

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முன்பள்ளிகள் அரசின் அறிவுறுத்தலுக்கமைய கல்முனைப் பிரதேசத்தில் இன்று (2021/02/22) வித்தியாரம்ப நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த ஐந்து மாதங்களுக்கும் அதிகமாக முன்பள்ளி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமையினால் மாணவர்கள் வித்தியாரம்ப நிகழ்வில் ஆரம்பத்துடன் பங்கேற்றனர்.
கல்முனைப் தெற்கு சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட கல்வி நடவடிக்கைகளை சுகாதார விதிமுறைகளைப் பேணி முன்னெடுக்க கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிமனை அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில்சுகாதார விதிமுறைப்படி ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை “ஹவுஸ் ஒப் இங்கிலிஸ்” ஆங்கிலப் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஸ்மி எம். மூஸா தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.எம்.ஹஸீப் உட்பட்ட பெற்றோர்கள் பலரும் பங்கேற்றனர்.