இலங்கை
கொரோனா வைரஸ்: மேலும் மூவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 530 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்
இதேவேளை 520 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இன்றைய தினம் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாகபேலியகொடை, திவுலப்பிட்டிய ,சிறைச்சாலை கொத்தணியைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை எட்டாயிரத்து 172. குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 221 கொரோனா. தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 614 .
இதே வேளை ,இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் மூவர் மரணமடைந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று இரவு உறுதி செய்தார்
இதற்கமைவாக கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.