Connect with us

இலங்கை

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் கைது!

Published

on

மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கால்போத்தல்கள் கொண்ட 100 மதுபான போத்தல் மதுபானங்களை நேற்று (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதை பொருள் மற்றும் சுற்றுச் சூழல் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டடை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன் போது சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து கால்போத்தல்கள் கொண்ட 100 மதுபான போத்தல்கள் கொண்ட மதுபானங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.