Connect with us

இலங்கை

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் 425 பேருக்கு இன்று கொவிட்-19 தடுப்பூசி…

Published

on

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், சட்ட மாஅதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் 425 பேருக்கு இன்று கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டது

அந்த வகையில், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு இவ்வாறு கொவிட்-19 தடுப்பூசி (Oxford AstraZeneca Covishield) வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக, மேல் மாகாணத்தில் பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பைப் பேணும் நபர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது