சர்வதேசம்
சந்தைப்படுத்துதல் உயரதிகாரி படுகொலை

சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் சாரா எவரார்ட், படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர், ‘கிளாபம் பகுதியில் காணப்படும் காட்சிகள் ஆழ்ந்த வேதனையடைய செய்கிறது. போராட்டத்திற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்கும் வழி இதுவல்ல’ என கூறியுள்ளார்.
சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர்கள், மாநகர பொலிஸ் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.
இதேபோன்று உட்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல், ‘ஒன்லைனில் பரவி வரும் சில காணொளிகள் கவலை அளிக்கின்றன. இந்த சம்பவத்தில் நடந்த விடயங்களை பற்றிய முழு அறிக்கையை அளிக்கும்படி மாநகர பொலிஸ் துறையிடம் கேட்டுள்ளேன்’ என கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 3ஆம் திகதி மாலை வீட்டிற்கு நடந்து செல்லும்போது சாரா எவரார்ட் என்ற பெண் காணாமல் போனதையடுத்து அவரின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், வெய்ன் காவுஜென்ஸ் என்ற பொலிஸார் சாராவை கடத்தி படுகொலை செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்பின்னர் குறித்த பெண், தென்மேற்கு லண்டனில் இறுதியாக உயிருடன் காணப்பட்ட இடத்திற்கு அருகில், பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவும் சூழலில் இது ஏற்புடையதல்ல என நீதிமன்றம் எச்சரித்துள்ள போதும் அதனை பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு நிதி கோரி போராடி வருகின்றனர்.
எனினும், பொலிஸார், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் 2021 சட்டமூலத்தை பட்டேல் அறிமுகப்படுத்தி உள்ளார். இது அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அழிக்கும் என விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.