Connect with us

இலங்கை

சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Published

on

அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சமான நாட்டை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்குமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான சமூக பராமரிப்பு மத்திய நிலையத்தை திறந்து வைத்து கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.02.2021) கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சேவைகளை பிரதேசமட்ட பொதுமக்களுக்கு இலகுவாக  வழங்கும் நோக்கில் 55 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பெரியநீலாவணை கிராமசேவையாளர் பிரிவில்  இந்த சமூக பராமரிப்பு மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பராமரிப்பு மத்திய நிலையத்தின் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதன்போதுசமூக பராமரிப்பு நிலைய வளாகத்தில் பயன்தரு பழவகை மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சமூகசேவை உத்தியோகத்தர் சி.குணரத்தினம், எம்.ஐ.எம்.முர்ஸித், சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி எஸ்.லில்லி மலர், இஸட்.எம்.றியாஸ் உட்பட பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.