Connect with us

கட்டுரை

சர்வதேச கல்வி தினம் – ஜனவரி 24

Published

on


கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சமயங்களும் கல்வி கற்ப்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும கட்டாயக் கடமை என்கின்றது. 2021 ஆம் ஆண்டுக்கான கல்வித்தினத்தில் யுனெஸ்கோவின் கருதுகோளாக “கொவிட் -19 தலைமுறைக்கான கல்வியை மீட்டெடுத்து புத்துயிர் பெறுங்கள்” என்ற விடயத்தினை சுட்டிக்காட்டுள்ளது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித்தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயிதுள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. 

கல்வி என்ற தமிழ்ச் சொல் கல் (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது. கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்  Education  என்பதாகும். இந்தச் சொல்  ēducātiō என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த  ēducātiō சொல்லானது வளர்த்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் பொருளைத் தரும் ēducō [5] என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēனūஉō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும்.

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்;காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன. மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை, ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இது போன்ற  செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகின்றார்கள் என்பதுதான் உச்;சக்கட்ட வேதனை. கல்வி ஏன்; மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் தோன்றுகின்றது. 

அக்கால கல்விமுறையை ; கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது நல்;வழிப்படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது கல்;வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். படிப்புடன் பல்வேறு கலைகளையும் வாழ்க்;கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் போது மத்ரஸா கல்வி முறை பின்பற்றப்பட்டது. இதில் எல்;லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களும் அவரையே தங்கள் முன்;மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டார்கள். 

மெக்காலேயின் கல்வி மேற்சொன்ன இரு காலக்கட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்;காலேயால் உருவாக்கப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதர் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின்; மேம்பாடு பற்;றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் ‘கண்டதே காட்சி கொண்;டதே கோலம்’ என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஓர் நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ஆரம்பித்துவிட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு தவறியதால் தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது. 


நெறிகெட்ட கல்வியின் விளைவுகள் இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தோ, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள்;, ஆபாச அரங்குகள், வன்முறை , மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெரோயின் போன்ற போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்;ள நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாசாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்;றை பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் தொலைக்காட்சிகளையும் தான் சேரும். 


இளைய சமுதாயம் தீமைகளை மட்டும் சொல்லி விட்டுச் தீர்வைச் சொல்லாவிட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான்; என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயனில்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் விடலாம். ஆனால்; இனிவரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமூகத்தை வளர்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்;டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும். 


தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்;ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக்கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்;விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்துவிடலாம்.  எனவே இன்றை தேவை நெறிசார்ந்த கல்;வியாகும்.   (Value Based Education)   ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப்; பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  


கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்;ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக்; கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்;படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே, கல்வி என்பது இருளில் ஒளியின் கதிர். இது நிச்சயமாக ஒரு நல்ல வாழ்க்கைக்கான நம்பிக்கை. இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. இந்த உரிமையை மறுப்பது தீமை. படிக்காத இளைஞர்கள் மனிதகுலத்திற்கு மிக மோசமான விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் கல்வியைப் பரப்புவதை உறுதி செய்ய வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *