Connect with us

இலங்கை

சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு வீதி ஊர்வலம்.

Published

on

 நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மத்திய முகாம் பிரதேசத்தில் டெங்கை ஒழிப்போம் சூழலை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில்  மாபெரும் சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் என்பன இன்று (22) நடைபெற்றன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அமரதாச ஆனந்த, உதவித் தவிசாளர் ஏ. கே. அப்துல் சமட், பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வடிவேல் ரமேஷ் ஆனந்தன், பிரதேச மட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.தயாளராஜ், கிராம சேவை உத்தியோகத்தர் கே. மதன், மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பல்லின மக்களும் ஒன்றாய் வாழும் நாவிதன்வெளி மத்திய முகாம் பிரதேசத்தில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த டெங்கு சிரமதான மற்றும் வீதி விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் டெங்கு அற்ற பிரதேசம் ஒன்றை உருவாக்குவதன் அவசியம் பற்றியும் டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு அறிவூட்டல் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டு.