இலங்கை செய்திகள்
சிவபுரம் கிராமத்தில் வீட்டுத்தோட்ட மூலம் பெருமை சேர்த்துள்ள பெண்!!

வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் வசித்து வரும் முத்துக்குமார் மகேஸ்வரி (வயது – 40) வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கிராம, மாவட்ட தேர்வில் பல்வேறு சாதனைகளை படைத்து சிவபுரம் கிராமத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
இவரது வீட்டுத் தோட்டத்தில் வாழைகளான கப்பல் ,செங்கதலி, இதரை, சாம்பல், சீனிக்கதலி மற்றும் பப்பாசி, கொய்யா, பலா, ஜம்பு, அன்னாசி, அரநெல்லி, எலுமிச்சை, பெஷன் புறூட், பட்டர் புறூட் , அம்பிரளங்காய், கத்தரி, வெண்டி, பயிற்றங்காய், அவரை, தம்பலை, பூ
மூட்டை மிளகாய், வானம் பார்த்த மிளகாய், தக்காளி, போஞ்சி, வல்
கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு, நெற்பயிர்ச்செய்கை, மண்புழு திரவம் உரம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, சேதனப் பசளை தயாரித்தல், தோட்டத்திற்கு பயன்படுத்தும் பசளை(இயற்கை), கோழி எரு, மீன் தண்ணீர், ஆட்டு உரம், மண்புழு உரம், சேதனப் பசளை, உள்ளிக் கரைசல், மஞ்சள்,வேப்பஞ்சாறு போன்றன காணப்படுகின்றன.
தனது வளர்ச்சிப்பாதை தொடர்பாக முத்துக்குமார் மகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வருடகாலமாகவே மேற்கொண்டு இந்தளவு சிறப்பான முறையில் மேற்கொண்டுவருகின்றேன். எங்களது வீட்டுத்தோட்டத்தில் இருப்பது முழுவதுமே இயக்கையானது எந்தவொரு செயற்கையான மருத்துகள், பசளைகள் எதுவுமே நாங்கள் பயன்படுத்துவதில்லை எனவும் மாகாண மற்றும் இலங்கை ரீதியில் வெற்றியினை தனதாக்கி கொள்வதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.
கிராம அலுவர் , சமூர்த்தி உத்தியோகத்தர், விவசாய திணைக்கள ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் இவ் வீட்டுத்தோட்டத்தினை பார்வையிட்டு வருகின்றனர்.