சர்வதேசம்
சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த லிபியாவிற்கு 20 மில்லியன் யூரோக்களை நன்கொடை

கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம், லிபியாவிற்கு 20 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவித் திட்டமான ‘சலமதி’ என்று அழைக்கப்படும் இந்த திட்டம் ஊடாக இந்த நிதி சென்றடைகின்றது.
இந்த நிதி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்க்கு சிறந்த மற்றும் விரைவான பதிலை வழங்க சம்பந்தப்பட்ட லிபிய அதிகாரிகளுக்கு ஆதரவை வழங்கும்.
யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட சலாமதி திட்டம், வைரஸை சிறப்பாகக் கண்டறிதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் லிபியாவின் போராடும் சுகாதார அமைப்புக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) மற்றும் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் சலாமதி திட்டம் லிபியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இது சென்றடையும் என தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக உள்நாட்டுச் சண்டையில் சிக்கித் தவித்து வரும் லிபியாவில், சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் தங்களது கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஜோஸ் சபடெல் தெரிவித்துள்ளார்.