ஆன்மீகம்
சுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம், சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த கொடியேற்ற உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றுதலுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு, பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
மேலும் அனுமதிக்கப்பட்ட 100 பேருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே சுகாதாரப் பிரிவினரால் ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading