இலங்கை
சுகாதார நடைமுறைகளை மீறிய நிறுவனங்கள்

மேல் மாகாணத்தினுள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 910 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவற்றுள் 807 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 103 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த 213 நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Continue Reading