Connect with us

இலங்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது

Published

on

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதி பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்,

கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை போன்ற குற்றச்சாட்டுக்காக மூவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அமைவாக ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,363 ஆகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஊனமுற்ற படைவீரரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.

பண்டாரகம ரைகம என்ற இடத்தில் நேற்றைய தினம் (17) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பியகம பிரதேசத்தில் சிற்றூண்டி சாலைக்குள் பிரவேசித்து குழப்பத்தை ஏற்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தேகமே, தொலேகடே பிரதேச நீர்பாசன காட்டுப்பகுதியில் மரத்தை வெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *