இலங்கை
தயாசிறி ஜயசேகர பூரண குணம்

கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இராஜாங்க அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் அவர் ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பராமரித்துச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading