Connect with us

இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

Published

on

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை இந்த ஆண்டு ஓகஸ்டில் நடத்த முடியாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று காலை தெரிவித்தார்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இல்லாததால் பாடத்திட்டங்கள் முறையாக முடிக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் இன்று மாலை தெரிவித்துள்ளார்.