Connect with us

இலங்கை

திங்கள் முதல் சந்தைகள் இயங்க அனுமதி

Published

on

வடக்கு மாகாணத்தில் வவுனியா  தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுச் சந்தைகளை உரிய இடங்களில் இயங்க இன்று  திங்கட்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் திருமண மண்டபங்களில் 150 விருந்தினர்களுடன் வைபவங்களை நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது 

மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கோரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதனை இடைநிறுத்துமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது.

அதுதொடர்பில் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் 

கொரோனா வைரஸ் பரவல் அதிக அபாய உள்ளதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருவோரை 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவசர அவசியம் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பத்து அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வரும் நபர்களை சுயதனிமைப்படுத்த முடியும் என்றார்