இலங்கை
தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.55 ற்கு பதுளை நோக்கி பொடிமெனிகே கடுகதி ரயில், காலை 5.55ற்கு கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசந்துறை நோக்கி யாழ்தேவி ரயில் மற்றும் பிற்பகல் 3.35 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி கடுகதி ரயிலும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.
இதே வேளை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு, மாத்தறை, பெலியத்த ஆகிய இடங்களுக்கும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
Continue Reading