இலங்கை
தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக் கன்றுகள் விநியோகம்

மனைப் பொருளாதார மற்றும் போசாக்கினை மேலோங்கச் செய்து குடும்ப அலகுகளை வலுவூட்டம் செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக் கன்றுகளை விநியோகம் செய்யும் நிகழ்வு இன்று(20) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் கல்முனைக்குடி-3 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாசீன் பாவா அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஏ நபீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading