சினிமா
நடிகர் காளிதாஸ் ஜெயராமை பாராட்டிய தளபதி விஜய்

சமீபத்தில் ஓடிடியில் பாவக்கதைகள் என்ற பெயரில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் தங்கம். அனைத்து தரப்பினரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் திருநங்கை வேடத்தை நடித்த காளிதாஸ் ஜெயராமை அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அவர் தயங்கினாராம். ஆனால் அதன் பின்னர் நடிக்க ஒத்துக்கொண்ட அவர் இந்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் சினிமாவை விட்டே விலகலாம் என முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவே அந்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்று ரசித்தனர்.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கின்ற விஜய், நடிகர் காளிதாஸ் ஜெயராமை அழைத்து தங்கம் படத்தில் அவர் நடித்த நடிப்பைப் பாராட்டியுள்ளார்.
இன்று காளிதாஸ் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
