சினிமா
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் இன்னும் ஓரு வருடத்திற்கு கூட தாக்குப் பிடிக்காது-பைல்வான் ரங்கநாதன்

நடிகை நயன்தாரா மற்ற ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். லேடி சூப்பராகிய அவர் போல வர வேண்டும், நமக்கும் அப்படியான ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது சக நடிகைகளின் எண்ணமும் கூட.
சினிமாவில் அதிக சம்பளம், தனக்கென சில கண்டிசன்கள் என இருந்தாலும் தொடர்ந்து தன் படங்களை வெற்றியடைய வைத்து வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை அவர் பல வருடங்களாக காதலித்து வருகிறார். பொது இடங்களில் இருவரும் ஒன்றாக இருப்பதும், அடிக்கடி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிடுவதும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் விசயங்கள் எனலாம்.
லிவ் இன் ரிலேசன்ஷிப் வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு திருமணம் எப்போது என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பைல்வான் ரங்கநாதன் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் இன்னும் ஓரு வருடத்திற்கு கூட தாக்குப் பிடிக்காது, இருவரும் பிரியப் போகிறார்கள் என்று கூறியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதனின் இப்படியான பேச்சு நயன்தாராவின் ரசிகர்களை கோபமடையச்செய்துள்ளது.