Connect with us

சினிமா

நாளை வெளியாகும் கோப்ரா பட டீசர்!

Published

on

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படத்தின் டீசர் நாளை காலை 10:32 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கு சில தளர்வுகளுடன் விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9 ஆம் திகதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற அறிவிப்பு செய்தனர்.

அதேபோல் நாளை ( 09-01-21 ) காலை 10:32 மணிக்கு இப் படத்தின் டீசர் வெளியாகும் என கோப்ரா படக்குழு தெரிவித்துள்ளது.