சர்வதேசம்
நினைவு சின்னம் இடித்தழிக்கப்பட்டதை கண்டித்து கனடாவில் வாகன தொடர் பேரணி

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சின்னம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கனடாவில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக கூடி வாகன தொடர் பேரணி ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையில் நடத்தினர்.
கடந்த 2009 ஆண்டு விடுதலை புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நடத்த இறுதி யுத்தத்தில் கண்முடித்தனமாக கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களை நினைவு கூறும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் குழு தனக்கு விடுத்த அறிவுறுத்தலின் படியே தான் நினைவுத்தூபியினை பிடித்ததாக துணைவேந்தர் பின்பு தெரிவித்தார். ஸ்ரீலங்கா அரசின் இந்த செயலை கண்டிக்கும் முகமாகவும், இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்பாக இருந்த இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் தகுந்த தண்டனையை வாங்கி கொடுக்கவும் வேண்டி மக்கள் இந்த தொடர் வாகன பேருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Brampton நகரசபை மண்டபத்தில் இருந்து ஆரம்பமான இந்த வாகன பேரணி Toronto நகர விதிகளுடாக சென்று Toronto நகரசபை மற்றும் Queen’s Park. பகுதியில் முடிவடைந்தது .ஒண்டாரியோ அரசியல் கட்சி தலைவர்கள், மாகாண முதல்வர் மற்றும் அணைத்து அதிகாரிகளும் முள்ளிவாய்க்கால் நினைவு தூவி இடிக்கபட்டத்துக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
