சர்வதேசம்
நியூசிலாந்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”நியூசிலாந்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நியூசிலாந்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள கிள்பார்ன் உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
நியூசிலாந்தின் வடகிழக்குப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் புதன்கிழமை ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்தின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாடு, பசிபிக்கின் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின் குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின் மையம் உள்ளது. இதன் காரணமாகவே நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது.