Connect with us

இலங்கை

நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒட்டமாவடியில். கைகோர்த்த அமீர் அலி

Published

on

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி  மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி  நகரை  அடைந்த நிலையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

2வது நாள் பேரணி வியாழக்கிவமை காலை மட்டக்களப்பு தாளங்குடா இருந்து ஆரம்பித்து ஆரையம்பதிஇ காத்தான்குடிஇ மட்டக்களப்புஇ ஏறாவூர்இ செங்கலடிஇ வாழைச்சேனை வழியாக ஒட்டமாவடி நகர எல்லைக்குள் நுழைந்த போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எங்கே எங்கே உறவுகள் எங்கே, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும். வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழங்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றனர்.

பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக் கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன்   கோ.கருணாகரன், எஸ்.ஸ்ரீதரன், அ.கலையரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் இன ஒற்றுமையுடன் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு,  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி புதன்கிழமை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இருந்து புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பேரணி நேற்று மாலை முல்லைதீவை சென்றடைந்து சனிக்கிழமை மாலை  பொலிகண்டியை சென்றடையும்.