Connect with us

சுகநலம்

நெய்யை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

Published

on

நெய்யை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவி செய்கிறது.

*நெய்யில் இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பிற ஊட்டச்சத்துக்களும், நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.

*நெய்யில் கொழுப்புகள் இருந்தாலும் சமையலுக்கு பயன்படுத்தும் பிற எண்ணெய்களை விட மிகக்குறைந்த அளவிலான கொழுப்பே இருக்கிறது.

*தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்ட சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

*நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.

*தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.

*உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *