Connect with us

இந்தியா

நேரடி வகுப்புகள் ரத்து!

Published

on

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எனினும்,  9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. 

ஆனால், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதால், மாணவர்களின் நலன் கருதி  9, 10, 11ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டபோதிலும், ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி நேரடி வகுப்புகளாலும் கொரோனா பரவும் அபாயம் இருந்தது. எனவே, தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்  என்றும் அறிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *